இன்று என் வாழ்வில் ஒரு வினோதமான நாள் . பல நாளாக நான் நினைத்திருந்த கனவு ஒன்று, இன்று மெய்ப்பட்டது. நான் சிறு வயதிலிருந்து கண்டு ரசித்து வரும் இரு பிரம்மாண்டமான நடிகர்களை ஒன்றாக பார்த்தேன் . இருவரும் நான் இருந்த அந்த அறையில் என் இருபுறத்தில் என் தோள் மீது உரசி நின்றார்கள். இது நான் வெகு நாளாக கண்டு கொண்டிருந்த கனவு. அதில் ஒருவருக்கு இன்று பிறந்த நாள் வேறு. வாழ்த்த தோன்றவில்லை. ஆனால் நான் இன்று ஆச்சர்யப்படவில்லை. ஆனந்தப்படவில்லை. எங்கும் என்னுடன் இருக்கும் காமெராவும் என்னிடம் இல்லை. அது தேவையாகவும் தோன்றவில்லை. நான் இவர்களை பார்த்தது ஒரு பொது நிகழ்ச்சியிலோ அல்லது ஒரு பாராட்டு விழாவிலோ அல்ல..... அடுத்த அறையில் உயிரற்ற நிலையில் ஒரு இருவத்திமூன்று வயது பெண் படுத்திருந்தாள். அவளை பறிகொடுத்த அவர்களது குடும்பம் அழுதுகொண்டிருந்தது. இவ்விருவரும் துக்கம் விசாரிக்க வந்திருந்தனர் .........இங்கேயா நான் உங்களை பார்க்க வேண்டும்??? இப்படியா நான் உங்களை பார்க்க வேண்டும்??? அவர் என்னை ஏதோ கேட்க, நான் எந்திரம் போல நின்றிருந்தேன்.. பதில் பேச சில நிமிடங்கள் பிடித்தன. சில நேரங்களில் விதியின் விநோதங்களை புரிந்து கொள்ள முடிவதில்லை, நியாயப்படுத்தவும் முடிவதில்லை. இப்படியும் ஒரு நாள் ...........
...........
Sunday, November 7, 2010
Subscribe to:
Comments (Atom)